சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. குறிப்பாக தலைநகர் ரியாத் மற்றும் அல் அஹ்ஸா (Al Ahsa) மாகாணங்களில் பெய்த அதீத மழையினால் பிரதான வீதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.

பள்ளிகளுக்கு விடுமுறை:

மழை மற்றும் வெள்ளத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு ரியாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக சவுதி கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக பாடங்களை தொடரவும் சில பகுதிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு:

தொடர் மழையினால் ரியாத்தின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவசர கால மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

By Admin