Latest Post

மருத்துவப் பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம். அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணையை கடக்க முயற்சி: மற்றுமொரு எண்ணெய் கப்பலை அழித்தது ஈரான்! ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம் – சவூதி தூதர். யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுவதற்கு பிரார்த்திப்போம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…)

புதிய குறும்படம் “குச்சவெளி” என பெயரிடப்பட்டுள்ளது!!

திருகோணமலை குச்சவெளி பிரிவில் உள்ள உள்ளுார் சமூகங்களின் நிலப் போராட்டங்கள் மற்றும் வாழ்ந்த யதார்த்தங்களை வெளிப்படுத்தும் புதிய குறும்படம் “குச்சவெளி” என பெயரிடப்பட்டுள்ளது!!

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மெய்வல்லுனர்  விளையாட்டு போட்டி!!

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியானது இன்றைய தினம் (03) கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அந்த வகையில் கடந்த மாதம் திருகோணமலை…

மூதூர் இரட்டை கொலை!
15 வயது “பேத்தி” கைது!

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் குறித்த சிறுமி தானே குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.…

புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் ஆர்ப்பாட்டம் !!

புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 83 பேருக்கு கடந்த 9 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் இன்று(07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த அரசாங்கத்தின் போது நியமனம் வழங்கப்பட்டிருந்த…

(2025-02-22) சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம்

சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் என்பது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஒரு நாளாகும். இது ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 22 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஸ்தாபக தினம் சவூதி…

மாலைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு…!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைத்தீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில்…

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க மொழியை எவ்வாறு பயன்படுத்தலாம்.

பெப்ரவரி 21 உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.2025 இற்கான தொனிப் பொருள் “அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான மொழி” இதன் பொருட்டு மொழியினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று…

குச்சவெளி திண்மக்கழிவகற்றல் இடம் தொடர்பான  கலந்துரையாடல்..!!
———————————————

குச்சவெளி முள்ளிவெட்டுவான் (ஜாயாநகர்) பகுதியில் உள்ள திண்மக்கழிவகற்றல் நிலையம் தொடர்பான கலந்துரையாடல் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் திரு வெ. இந்திரஜித் அவர்களின் தலைமையில் இன்று (19)…

அகற்றப்படாத ஜாயா நகர் குப்பை மேடு…!!

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட ஜாயாநகர் பிரதேசத்தில் முறையற்ற விதத்தில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக இன்று (16) குச்சவெளி பிரதேச வாழ் மக்கள் A. R.…

காதலர் தினத்தைக்கொண்டாட காதலி மறுப்பு :  உயிரை  மாய்த்துக்கொண்ட காதலன்..!

காதலர் தினத்தைக்கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச்சேர்ந்த இளைஞரொருவர் நேற்று கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் ல், அம்பலபொக்கணை பகுதியைச்சேர்ந்த…

குச்சவெளி, கும்புருபிட்டியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..!!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட 6 ஆம் வட்டாரம் கும்புருபிட்டியை வசிப்பிடமாக கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் குறித்த சம்பவம்…

முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு
103 பயணிகளுடன் திருமலைக்கு வருகின்றது..!!

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று இன்று வியாழக்கிழமை (19) கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளதாகவும், குறித்த படகில்…

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கொலைசெய்த நபர் தடுப்பிலிருந்து தப்பிச் சென்று 6 மாதங்களின் பின் கைது…!

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55…

புலனாய்வு அறிக்கையிடல் செயலமர்வு..!!

AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு இன்று (15) திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது புலனாய்வு…

தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

கிண்ணியா சூரங்கல் கிராம உத்தியோகத்தர் பிரிவின் சலாமத் நகர் கிராமத்தில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலை மிகவும் சிறப்பாக மக்கள் சேவையினை வழங்கி வருகின்றது. இவ் வைத்தியசாலையில் பல…