அமெரிக்கப் படைகள் தங்களது அடுத்த இலக்கை நோக்கி நகரத் தயாராகிவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஈரான் உடனான தற்காலிக போர் நிறுத்தம் குறித்துப் பேசிய அவர், ஒரு “உண்மையான ஒப்பந்தம்” எட்டப்பட்டு, அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் ஈரான் எல்லைப் பகுதியிலேயே நிலைகொண்டிருக்கும் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அமெரிக்க இராணுவத்தினர் எவ்வித பின்வாங்கலையும் செய்யக்கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார்.

“அமெரிக்கா தனது அடுத்த வெற்றிகரமான ஆக்கிரமிப்பிற்கு (Next Conquest) தயாராக உள்ளது” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள கருத்து, மத்திய கிழக்கில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஜனாதிபதி விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ராஜதந்திர நகர்வா அல்லது நேரடிப் போருக்கான அறிவிப்பா என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

By Admin