பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா – ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையில் தற்போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் முகம்மது அமிரி முகடம், இன்று காலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். ஈரானின் 10 அம்ச அமைதித் திட்டம் குறித்துப் பேச உயர் மட்டக் குழு இன்று இரவு இஸ்லாமாபாத் வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அந்தப் பதிவு வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென நீக்கப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த ஈரான் தூதரக அதிகாரி, அந்தத் தகவல் முன்கூட்டியே தவறுதலாகப் பகிரப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கவுள்ளதாக வெள்ளை மாளிகை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், ஈரானியக் குழுவின் வருகையில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம் மற்றும் பதிவுகள் நீக்கம், பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
