இலங்கையில் தற்போதைய வாழ்வாதாரப் பிரச்சினைக்கு அரசாங்கம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றது.

இதனடிப்படையில் சமூர்த்தி, முதியோர் கொடுப்பனவு, புற்றுநோய், சிறுநீரக நோய் போன்ற விசேட நோய்க் கொடுப்பனவுகள் பெறுபவர்களுக்கு 5000/= ரூபாய் பணம் கொடுத்து உதவியது.

ஆனாலும் இன்னும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்கள் ஏற்கனவே சமூர்த்திக்கு பதிந்து சமூர்த்தி புத்தகம் கிடைக்காமல் எதிர் பார்த்து இருப்பவர்களுக்கு 5000/= ரூபாய் மாவட்ட ரீதியில் கொடுக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 35ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இவ்வாரம் வழங்க அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply