குச்சவெளி, திருகோணமலை – நாள்பட்ட நோய்களைத் தடுப்பதற்கும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதட்கும் தினசரி நடைப் பயிட்சியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாற்றத்தக்க சுகாதார முயற்சியாக “Walk 30+” (வாக் தேர்ட்டி பிளஸ்) எனும் நிகழ்வை நடத்த உள்ளது. இந்த நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜூன் 10, 2025 அன்று காலை 07:00 மணியளவில் திருகோணமலை குச்சவெளியில் உள்ள அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

“Walk 30+” எனும் முன்னெடுப்பு வயது வித்தியாசமின்றி அனைவரையும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க தூண்டும் ஒரு வெற்றிகரமான முயட்சியாகும், இது இதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற ஆபத்தான நோய்களை கட்டுப்படுத்த உதவும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வாகும்.

இந்த நிகழ்வு சுகாதார நிபுணர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், சமூக நலன்விரும்பிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஒன்றிணைந்து ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்போடு பங்கெடுக்கும் உட்சாகமான ஒரு நடைப்பயணமாக அமையும்!

குறைந்த பட்சம் தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன, அவைகளில் சில:

  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் – இதயத்தை வலுப்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
  • மனநலம் மேம்படும் – மனநிலையை உயர்த்தி, மன அழுத்தத்தை குறைத்து, உற்சாகத்தை அதிகரிக்க உதவுகிறது.
  • எடை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது – கலோரிகளை எரிக்கவும், மார்க்கெழுச்சியை (metabolism) அதிகரிக்கவும், உடல் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.
  • மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் – தினமும் நடைப்பயிற்சி செய்வது நினைவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • நற்செயலை உற்சாகமாக்கும் – சிறந்த தூக்கத்திற்கும், உற்சாகமான தினத்திற்கும் நடைப்பயிற்சி பேருதவியாக இருக்கும்.

நாட்பட்ட வியாதிகளை நடைப்பயிச்சியின் மூலம் கட்டுப்படுத்த நாம் நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் நடப்பதட்கு முயட்சி செய்ய வேண்டும்.

றிஆயா பௌண்டஷனின் “Walk 30+” எனும் முக்கிய முன்னெடுப்புக்கு நீங்களும் உதவ முடியும்

  • நீங்கள் குச்சவெளி பிரதேசத்தை அண்மித்து இருந்தால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜூன் 10, 2025 காலை 07:00 மணியளவில் கலந்துகொள்ளுங்கள்
  • நீங்கள் தூர பிரதேசத்தில் இருந்தால், குறித்த தினத்தில் உங்கள் 30 நிமிட நடையின் முக்கிய புகைப்படம் ஒன்றை பெயர் மற்றும் இடத்தைக் குறிப்பிட்டு எமது whatsApp இல 0712424444 அனுப்பி வையுங்கள்
  • உங்கள் புகைப்படங்களை உங்கள் முகநூலில் #Walk30+ மற்றும் #Riaya எனும் ஹாஸ் டேக் உடன் பதிவேற்றம் செய்யுங்கள்!
  • எமது இந்நிகழ்வுக்கு ஏதெனினும் வேறு விதத்தில் ஒத்துழைப்பு வழங்க விரும்பினால் தொடர்புகொள்ளுங்கள் : 075 9999479

By Admin

Leave a Reply