அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள நாடாளுமன்ற அலுவலகக் கட்டடத்திற்குள் (Congressional Office Building) புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட டஜன் கணக்கான முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரான் மீதான போர்த் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அமைதியை வலியுறுத்தியும் இந்தத் திடீர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதி இன்றி நுழைந்து இடையூறு விளைவித்ததாகக் கூறி, பாதுகாப்புப் படையினர் அவர்களைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களே போருக்கு எதிராக வீதியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு எமது இணையதளத்தைப் பாருங்கள்: www.kuchchaveli.com

By Admin