​இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்திலுள்ள மொழித்துறையின் (Department of Languages) பதில் தலைவராகப் பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில்
​மொழித்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவர், மாணவர்களின் கல்வி மேம்பாடு, புதிய பாடத்திட்ட அறிமுகங்கள் மற்றும் பீடத்தின் வளர்ச்சிப் பணிகளில் முன்னின்று செயற்படவுள்ளார்.

இவரது நியமனத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினர், மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்கள் எனப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

​பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் கலை கலாசார பீடாதிபதி ஆகியோரின் வழிகாட்டலில், பேராசிரியர் அஷ்ரஃப் அவர்களின் தலைமையில் மொழித்துறை ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply