ஆர்.சதாத் ,கிண்ணியா

சமகாலத்தில் வலைத்தளங்கள் ஊடாக மற்றவர்களை கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தி அதன் மூலம் சிலர் சந்தோசமும் ஒரு வித திருப்தியும் அடைந்து வருகின்றனர்.

ஒருவரை கொச்சைப்படுத்தி அதன் மூலம் திருப்தியடைவதிலும் பார்க்க அதிகமான திருப்திகளை அடைந்து கொள்ளும் வழி சொல்லட்டுமா?

எப்படியாப்பட்டவரும் ஏதாவது ஒரு நற்செயல் தனிப்பட்ட ரீதியிலோ, சமூக ரீதியிலோ செய்திருப்பார்தானே , அச்செயலைப் பாராட்டி அதனை முகநூல் வாய்லாக பப்லிக் படுத்தி பாருங்களேன். அதில் வரும் ஆத்ம திருப்திக்கும் சந்தோசத்திற்கும் அளவே இல்லை.

ஒருவரிடம் உண்மையிலேயே நீங்கள் கூறும் குறைகளும் தவறுகளும் இருந்தாலும் அதனைக் கூறாமல் அவரிடம் காணப்படும் நற்குணத்தை,செயலைக் கூறுவதுனூடாக ,அவரிடமுள்ள தவறுகள் தானாகவே மறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், ஒருவரை சமூக வலைத்தளங்களில் நல்லவராகவும் பண்பானவராகவும் அடையாளம் காட்டினால் அவர் நிச்சயமாக சமூகத்தில் தவறு செய்யக் கூச்சப்படுவார். “ஆஹா சமூகம் என்னைப்பற்றி நல்லவனாக கூறுகிறதே ” என்ற உற்சாக உந்துதல் அவர் உள்ளத்தை நாளும் வருடிக்கொண்டே இருக்கும்.

மாறாக, நீங்கள் ஒருவரை தரக்குறைவாக எழுதும் போது அவர் மட்டும் சமூகத்தால் குறைவாக மட்டிடப்பட மாட்டார். எழுதுகின்ற உங்களைப்பற்றிய கேவல மனப்பதிவையும் சம்பாதித்துவிட வழிவகுத்துவிடும்.

ஒருவரின் குறைகளை உங்களது சுய தேவைப்பூர்த்திக்காக நீங்கள் வெளிப்படுத்தினாலும் அது நிச்சயமாக இறுதியில் அது எந்த வித நன்மையையும் உங்களுக்கு தந்து விடப்போவதில்லை.

சரி இவ்வாறு குறைகளையே கிண்டிக்கிளரும் மனோ நிலை எமக்கு எப்படி ஏற்பட்டது? என்பதை இனிக் கவனிப்போம்

சிறுவயதில் தாய்ப்பால் எமக்குத் தாய் தரும் போது இடையில் திடீர் என தாய்ப்பாலை பறித்துவிடுவதாலும்,

சிறுவயதில் ஏதோ நாம் கெட்ட வார்த்தைகள் பேசிவிட்டாலோ, செய்து விட்டாலோ உனக்கு இறைவன் வாய்ல சுடுவான், நரகத்தில போடுவான் என எதிர் மறையாக குறையுள்ளவனாக இறைவனை காட்ட முனைந்ததாலும்,

( இதனை நீ நல்லது செய்து பார், நல்லது கதைத்துப் பார், மற்றவருக்கு உதவி செய்து பார் இறைவன் உனக்கு நல்ல நல்ல எல்லாம் தருவான், சொர்க்கத்தில கேட்பதத் தருவான் என நேர் நிலையாக சொல்லியிருக்கலாம்)

இவ்வாறு சிறு வயதில் வளரும் பருவத்தில் எமது சமூத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட உளவியல் தாக்கங்களே இவ்வாறு எதனை எடுத்துக் கொண்டாலும் குறைகண்டு மற்றவரை அவமானப்படுத்தி இன்பம் காணும் பழக்கத்திற்கு நாம் அடிமையாகி விட்டோம்.

இவ்வாறான ,மற்றவர்களைப் பற்றி குற்றம் குறை காண்பவர்கள் கூறும் நியாயம் “நான் உண்மையைத்தானே கூறுகிறேன் , எனக்கு முதுகுக்குப் பின்னால் கூறிப்பழக்கமில்ல , முகத்துக்கு நேரே பேசிடுவேன்” என என்னோவோ உலத்திலே உதித்த உத்தமன் நான்தான் என்ற உணர்வுகளைக் கொட்டுவார்கள்.

மேலும் , அவ்வாறு மற்றவர்களைக் குற்றங்குறை சொல்பவர்கள் நிச்சயம் தனது குற்றங்குறைகளை மறைக்க, மற்றவர் பக்கம் சமூகத்தின் பார்வையைத் திசை திருப்புவதே முதல் நோக்கம்.

(அப்போ குறைகளை , பிழைகளை சுட்டி காட்டக்கூடாதா ? என்று எனது மறு கன்னத்தில் அறைந்து விடாதீர்கள். எவற்றை,எப்படி எங்கே எவ்வாறு என்றெல்லாம் அல் குர் ஆனும், சுன்னாவும், ஏனைய அறிஞர்களும் வகுத்துத் தந்திருக்கின்றார்கள் அதனை சரியாக விளங்க வேண்டும்)

எனவே, எமது சிறுபராய உளவியல் தாக்கத்தால் உண்டான இப்பழக்கத்தை மாற்றிக்கொண்டு நிறைகளைக் காணப்பழகுவோமாக..

Leave a Reply