Author: JF

15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது..!
————————————————————————

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவி, டியூஷன் வகுப்பில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தனது காதலனான பாடசாலை மாணவனை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது, சந்தேக நபரின் காதலன் என்று கூறிக்கொண்ட மாணவன், தனது நண்பர் ஒருவர் வசித்து வந்த ஹோமாகம பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு குறித்த மாணவியை அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள் வேறு மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனான காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த, அதே பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.

கைதானவர்களில் ஐந்து பேர் 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், மற்ற இருவர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாடசாலை மாணவியை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

(2025-02-22) சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம்

சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் என்பது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஒரு நாளாகும். இது ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 22 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஸ்தாபக தினம் சவூதி…

மாலைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு…!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைத்தீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில்…

குச்சவெளி திண்மக்கழிவகற்றல் இடம் தொடர்பான  கலந்துரையாடல்..!!
———————————————

குச்சவெளி முள்ளிவெட்டுவான் (ஜாயாநகர்) பகுதியில் உள்ள திண்மக்கழிவகற்றல் நிலையம் தொடர்பான கலந்துரையாடல் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் திரு வெ. இந்திரஜித் அவர்களின் தலைமையில் இன்று (19)…

பழங்கள் மற்றும் மறக்கறிகளின் விலையில் வீழ்ச்சி..!

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறி விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மொத்த விலையில் கேரட் கிலோ ஒன்று 150 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 250 ரூபாவாகவும், கத்தரிக்காய்…

fire accident அக்குரணை உணவகத்தில் தீ விபத்து..!

அக்குரணை உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கட்டிடத்தின் பேக்கரியில் உள்ள மின்சார அடுப்புகளுக்கு, மின்சாரம் வழங்கும் அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார்…

இன்றைய வானிலை அறிவிப்பு..!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா…

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி அறிவிப்பு…!

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…

உயிரைப் பறித்த கிரிக்கட் பந்து

11 வயது சிறுவன் ஒருவன் கிரிக்கட் பந்து தாக்கியதில் உயிரிழந்த சம்பவமொன்று இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேயில் பதிவாகியுள்ளது. கிரிக்கட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குறித்த சிறுவனின் அந்தரங்கப்…

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு மாணவன் படுகொலை..!

நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி,

மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் மற்றுமொரு மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்

நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டேன்லி ஸ்டெப்பில்  என்ற பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23 ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி,

மற்றைய மாணவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எதிர் பார்க்க முடியாத விலை குறைவில் இன்றிலிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள்!!!

ஜப்பான் டொயோட்டா வாகன நிறுவனம் இலங்கைக்கான வாகன இறக்குமதியை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் புத்தம் புதிய KDH வாகனம் இலங்கை நாணயப்படி 01 கோடியே…

திருமணமானவர்களிடையே அதிகரிக்கும் விவாகரத்துக்கள்..!

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாவட்ட…

இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…!

🔴 திகன – கும்புக்கந்துறை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இன்றைய தினம் நீராட சென்ற இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களை மீட்கச் சென்ற ஒருவரும்…

மீண்டும் தலை தூக்கும் டெங்கு..!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத்…

நாட்டில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு, அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால், உயிரிழக்கின்றனர் என…

SJB vs NPP விவாதம்: புதிய அறிவிப்பு

SJB தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான உத்தேச விவாதத்தை ஒருங்கிணைப்பதற்காக சமகி…

லெய்ஸ்மனியாசிஸ் என்று சொல்லப்படும்  தோல் நோய்…!

Leishmaniasis( லெய்ஸ்மனியாசிஸ்) தற்போது இலங்கையில் பல பகுதிகளில் பரவிவரும் ஓர் தோல்நோய். நோய் உருவாக்கும் கிருமி- Leishmania donovaniநோய் பரப்பும் பூச்சி- sand fly இது நோய்…

பிரசவத்தின் போது கணவருக்கு அனுமதி..!

கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது கணவர் துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரச வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.…