உலகளாவிய ரீதியில் ஏப்ரல் 22 ஆம் திகதி கொண்டாடப்படும் புவி தினத்தை (Earth Day) முன்னிட்டு, இந்த ஆண்டு “எங்கள் சக்தி, எங்கள் கிரகம்” (Our Power, Our Planet) என்ற கருப்பொருளின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு அமைய, இலங்கையின் மலையகப் பகுதியில் சமூகப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில், திம்புள்ள பத்தணை பகுதியில் விசேட மரம் நடுகை நிகழ்வுகள் இடம்பெற்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுத்தல் மற்றும் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, திம்புள்ள பத்தணையில் உள்ள ப்ளூமிங் பிட்ஸ் (Blooming Bits) பாலர் பாடசாலை மற்றும் பிரைட் ஸ்டார் (Bright Star) பாலர் பாடசாலை ஆகியவற்றில் இந்த மரம் நடுகை முன்னெடுக்கப்பட்டது.
எதிர்கால சந்ததியினரான சிறுவர்கள் மத்தியில் மரங்களின் அவசியம் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வளர்க்கும் நோக்கில், மாணவர்கள் ஆர்வத்துடன் மரம் கன்றுகளை நட்டனர்.
இந்த நிகழ்வில் சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தின் தலைவர் திரு. லிந்துலை ராஜ்குமார், செயலாளர் திரு. கெலிவத் மாரிமுத்து, திப்புள்ள சசிகலா மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நம்பிக்கையான மற்றும் உடனுக்குடனான செய்திகளை உடனுக்குடன் பெற எமது இணையதளம் www.kuchchaveli.com ஐப் பாருங்கள்.
