அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக முற்றுகையிடுமாறு அந்நாட்டு கடற்படைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகளுக்கு இடையே சுமார் 21 மணிநேரம் நீடித்த அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி தோல்வியடைந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

முக்கிய பின்னணி:

கடந்த பிப்ரவரி 2026 இல் தொடங்கிய மோதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் இருந்தது. இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் விதிக்கும் சட்டவிரோத வரிகள் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளால் பேச்சுவார்த்தை முறிந்தது.

ட்ரம்ப்பின் எச்சரிக்கை:

தனது ‘Truth Social’ தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், “உலகிலேயே தலைசிறந்த அமெரிக்க கடற்படை, ஹோர்முஸ் ஜலசந்தியில் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் முற்றுகையிடும் பணியை உடனடியாகத் தொடங்கும்” எனத் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானுக்கு ‘சுங்க வரி’ (Illegal Toll) செலுத்தும் கப்பல்கள் சர்வதேச கடல் பகுதியில் இடைமறிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  

இந்த அதிரடி நடவடிக்கையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.

By Admin