கிழக்கு மாகாணம், பொலனறுவை மாவட்டத்தை இணைத்து நடாத்தப்பட்ட Ritzbury junior Athletic championship போட்டியில் திரியாய் தமிழ் மகா வித்தியாலயம், பெண்கள் பிரிவில் 8 பதக்கங்களுடன் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

19.07.2025 சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் திரியாய் தமிழ் மகா வித்தியாலயம், பெண்கள் பிரிவில் 8 பதக்கங்களுடன் (1 தங்கம், 2 வெள்ளி, 5 வெங்கலம்) ஒட்டு மொத்தமாக 42 புள்ளிகளைப் பெற்று  மூன்றாமிடத்தை பெற்று பாடசாலைக்கும், திருகோணமலை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

Leave a Reply