சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாக ஐந்து உழவு இயந்திரச் சாரதிகள் உற்பட 7 பேர் சனிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் இன்று திங்கட்கிழமை (14) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் அகழ்வு மேற்கொண்டமைக்காகவே இவ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேருநுவர பொலிஸார், கந்தளாய் விசேட அதிரடிப்படையிர் இணைந்து இவ் சுற்றி வளைப்பை மேற்கொண்டு உழவு இயந்திரங்களையும் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
