கேமரூன்: சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ (Pope Leo), உலகை ஆளும் தலைவர்களை “சர்வாதிகாரிகள்” (Tyrants) என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
தற்போது கேமரூன் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள போப் லியோ, அங்கு ஆற்றிய உரையில், “உலகம் இன்று ஒரு சில சர்வாதிகாரிகளின் கைகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. அழிப்பதற்கு ஒரு நிமிடம் போதும், ஆனால் அதனை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு மனித ஆயுட்காலம் போதாது என்பதை போரை விரும்புபவர்கள் உணர மறுக்கிறார்கள்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சமூக வலைதளங்கள் வாயிலாக போப் லியோவை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில், போப்பின் இந்த கருத்துக்கள் அதற்கு வழங்கப்பட்ட மறைமுக பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
“போருக்காகவும், அழிவுக்காகவும் பில்லியன் கணக்கான டாலர்களை வாரி இறைக்கும் உலக நாடுகள், கல்வி, சுகாதாரம் மற்றும் மக்களின் மறுவாழ்வுக்காக நிதி ஒதுக்கீடு செய்யத் தயங்குவது வேதனைக்குரியது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். போப் லியோவின் இந்த அதிரடியான மற்றும் ஆவேசமான பேச்சு தற்போது உலக நாடுகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
