தி/கிண்/ அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய ஆங்கிலப் பாட ஆசிரியர்களான H.M. இம்ராம் மற்றும் S.M. சாமிர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட English Festival Ceremony பாடசாலையின் அதிபர் S. முகம்மட் நஸீர் சேர் அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 2025.08.27 ஆம் திகதி புதன் கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக M.A.M. முஜீப் (LLB, Attorney at Law, Executive Director – Barakah Charity – Sri Lanka) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும், கௌரவ அதிதிகளாக கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்ப கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரும், பாடசாலையின் EPSI இணைப்பாளருமாகிய A.S. அனீபா, ஆங்கிலப் பாட ஆசிரிய ஆலோசகர் T. காலித் ஆகியோரும் கலந்துசிறப்பித்தனர்.
அத்துடன், பிரதி அதிபர் S.M. சிபான், உதவி அதிபர் A.L. பாஸிஸ், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் K.T. பாயிஸ், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் English Festival Ceremonyயில் மாணவ, மாணவிகளின் ஆங்கில மொழியிலான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
