அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் ஓவியக் கண்காட்சியும் கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையின் சித்திரப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் A.W.M. நௌபர் சேர் அவர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழாவும்.
கிண்ணியா கல்வி வலய தி/கிண்/ அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சித்திரப் பாட ஆசிரியை A.G. நதீரா அவர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலை முதல்வர் N.M. அஹமட் நஷ்ரப் சேர் அவர்களின் தலைமையில் 2025.05.02 ஆம் திகதி பாடசாலையின் நூலக மண்டபத்தில் ஓவியக் கண்காட்சியும் கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையின் சித்திரப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் A.W.M. நௌபர் சேர் அவர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழாவும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையின் சித்திரப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் A.W.M. நௌபர் சேர் பிரதம விருந்தினராகவும் முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் A. மஹ்றூப் சேர் கௌரவ அதிதியாகவும் கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் N.M. அறபாத் சேர் சிறப்பு அதிதியாகவும் கலந்துசிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பணி நிறைவு பெறும் சித்திரப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் A.W.M.நௌபர் சேர் அவர்கள் அதிதிகளாலும் ஆசிரியர் சமூகத்தினாலும் வாழ்த்துப்பா சமர்ப்பணம் செய்தும் மற்றும் நினைவுச் சின்னங்கள், பரிசில்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்கள்.
