முல்லைத்தீவு முத்தையன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் பின்னணி வெளிக்காட்டப்பட்டு இப்படுபாதகத்தை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
21%
இவ்வாறு கே.காதர் மஸ்தான் Mp விடுத்துள்ள ஊடகக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தம் முடிவடைந்த பின்னரும் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற இவ்வாறான நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த படுபாதக சம்பவங்கள் காரணமாக அப்பகுதி மக்கள் ஐயமும் பீதியும் அடைந்துள்ளனர்.
ஆகவே, மக்கள் பெரும் நம்பிக்கையில் வாக்களித்து ஆட்சி பீடம் ஏறி உள்ள இந்த அரசு இந்த நிலமைகளை கருத்திற் கொண்டு விரைவாக செயற்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வேண்டிக் கொள்வதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
