இலங்கைச் சிறையில்  உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் தாம்பரம் விரைவு ரயில் தாமதம்: தண்டவாளத்தின் இருபுறமும் மீனவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு:

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால்  சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில்  மீனவர்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் தாம்பரம் விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. தங்கச்சிமடத்தில் நடைபெற்ற மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு நேராக தங்கச்சிமடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், திருப்பாலைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற 55 நாட்களில் 61 மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கையின்  பல்வேறு சிறைசாலைகளில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களின்  தொடர் கைது நடவடிக்கை கண்டித்து இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்பட்ட தாம்பரம் விரைவு ரயிலை தங்கச்சிமடத்தில் மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து இன்று மதியம் நான்கு மணி அளவில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் 600க்கும் மேற்பட்டோர் தங்கச்சிமடம் யாகப்பா பள்ளியில் இருந்து ஊர்வலமாக சென்று பள்ளியில் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்களின்  இந்த ரயில் மறியல் போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து நான்கு மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் 4.25க்கு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

ஆனால் மீனவர்கள் ரயில் தண்டவாளத்தை விட்டு எழுந்து செல்லாமல் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தாம்பரம் நோக்கி சென்ற  ரயில் மீனவர்கள் போராட்டம் நடத்திய இடத்தில் அரை மணி நேரம் நின்றது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் மீனவர்கள் இலங்கை  சிறையில் உள்ள  மீனவர்களை விடுதலை  செய்ய வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்தனர்.

பின்னர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  மீனவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் மறியல் போராட்டம் நடந்தியதால் ரயில் தாமதமானது மீனவர்களுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி எனவும், இதனால் மத்திய அரசுக்கு மீனவர்களின்  போராட்டம் சென்றடைந்திருக்கும் என நம்புவதாக தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தண்டவாளத்தை விட்டு கலைந்து சென்றனர்.

இதையடுத்து நடு வழியில்  அரை மணி நேரமாக காத்திருந்த தாம்பரம் விரைவு ரயில் மெதுவாக கடந்து சென்றது.

மீனவர்கள் இந்த ரயில் மறியல் போராட்டம் காரணமாக தங்கச்சிமடம், பாம்பன், அக்காள்மடம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே பாம்பன் நாட்டுப்படகு  மீனவர்கள் ஒன்பது பேருக்கு தலா  ஒருவருக்கு 3.50 கோடி (இலங்கை பணம்) இந்திய மதிப்பிற்கு  ஒரு கோடி என அபராதத்துடன் புத்தளம்
நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்டி: ஜேசுராஜா – அனைத்து விசைப்படகு மீனவ தலைவர் ராமேஸ்வரம்

Leave a Reply