உள்நாட்டு முதலீட்டாளர்கள் மின்சக்தி துறைக்கு வழங்கும் முதலீட்டை விரிவுபடுத்துவதே எமது அரசாங்கத்தின் திட்டம் என்று வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
குருநாகலயில் புதிய மின்உற்பத்தி நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு 5 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்கும் புதிய சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்று வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடியினால் திறந்து வைக்கப்பட்டது
குருநாகல் ஹிரிபிட்டிய பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலத்தில் அரைவாசி நிலப் பரப்பில் பரந்து காணப்படும் சூரிய மின் தகடு பேன் ஏசியன் பவர் தனியார் கம்பனியின் உபகம்பனியான PAP MPHL Solar Pvt. Ltd. ஊடாக செயற்படுத்தப்பட்டுள்ளது.
