அண்மையில் கொத்மலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் கொடூரமாக கொள்ளப்பட்டவர்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் ஜனாதிபதியின் நிதியிலிருந்து பகிர்ந்தளிக்கப்படும் என்ற செய்தியை பார்க்க முடிந்தது!!
இருபத்தி ஒரு உயிர்களை ஈவிரக்கமின்றி காவுகொண்ட விபத்துக்கு காரணம் கண்டறியப்பட்டு இது போன்ற விபத்துகளை நாடு பூராகவும் தடை செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை!
இலங்கையில் வருடம் ஒன்றுக்கு சுமார் 2000 கும் மேட்பட்ட மரணங்கள் கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக நடந்துகொண்டு தான் இருக்கிறது ஆனால் இவைகளை தடைசெய்ய அரசாங்கமோ மக்களாகிய நாமோ என்ன செய்திருக்கிறோம் என்பது விடையற்ற கேள்வியாகவே இருக்கிறது!!
தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையின்படி, நவம்பர் 30, 2024 வரை 22,786 வீதி விபத்துகள் நிகழ்ந்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் (7,854), அதைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிகள் (3,545) மற்றும் கார்கள் (3,366) ஆகியவற்றால் ஏற்பட்டன. 2024 ஆம் ஆண்டில் இரட்டை பயன்பாட்டு (Van) வாகனங்கள் 2,728 விபத்துகளையும், லாரிகள் 2,429 விபத்துகளையும், தனியார் பேருந்துகள் 1,510 விபத்துகளையும் ஏற்படுத்தின.
இலங்கை காவல்துறையின் தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் வழியாக வெளிவந்த தரவுகளின்படி, கடந்த ஆண்டு பேருந்து ஓட்டுநர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 318 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே போன்று, 1,705 பாதுகாப்பற்ற வாகனம் ஓட்டுதல், 1,651 அதிகூடிய வேகத்தில் வாகனம் ஓட்டுதல் மற்றும் 15,670 பேருந்து ஓட்டுநர்கள் சாலை விதிகளை மீறியதாக பதிவாகியுள்ளன.
இப்படி எமது நாட்டில் வீதி விபத்துகளை தூண்டும் சாரதிகளுக்கான ஒழுங்கான சட்டநடவடிக்கலை நடைமுறைப்படுத்த தவறும் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால் இது போன்ற கோர விபத்துகளை தடுத்திருக்கலாம் என நாம் நினைக்கிறோம்!
நாள் தோறும் வீதி விபத்துகளை சந்திக்கும் எமது நாடு ஏன் இன்னும் தடுப்பதட்கு தயங்குகிறது என்பது மட்டும் சரியாக புரியவில்லை!
கடந்த 05 வருடங்களில் சுமார் 12149 உயிர்களை அநியாயமாக காவுகொண்டது இந்த அலட்சியப்போக்கும் விதிகளை மீறி வீராப்போடு வாகனத்தை ஓட்டும் சாரதிகளுமே !!
உயிர்கள் விலைமதிக்கமுடியாதவைகள்! பொறுப்போடு செயட்படுவோம், பிறர் உயிர்காப்போம் !!
A. R. M. Muzammil B.Sc. (Hons)
Director – KVC Media
