20-12-2025 திருகோணமலை – குச்சவெளி
சமூக முன்னேற்றத்திற்கும் புதுமையான சிந்தனைகளுக்கும் வழிகாட்டும் “வாழ்வில் வெற்றிபெற மாற்றி யோசிப்போம்!” என்ற நூல் இன்று குச்சவெளியில் சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு றிஆயா பௌண்டேஷன் திட்ட மேலாளர் ஜனாஃப் அ. க. ஹப்பார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நூலின் முதல் பிரதியை குச்சவெளி பிரதேச சபையின் மதிப்பிற்குரிய மேனாள் உறுப்பினர் ஜனாஃப் அ. க. பலீல் அமீன் பெற்றார். தொடர்ந்து, முதன்மை விருந்தினர் பிரதியை Director General, Ministry of Digital Economy பதவி வகிக்கும் ஜனாஃப் அ. ச. மு. பாயிஸ் பெற்றார்.
நூல் அறிமுகம் ஜனாஃப் அ. ச. மு. பௌசி அவர்களால் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திரு. கதிர். திருச்செல்வம் அவர்கள் நூல் திறனாய்வை நிகழ்த்தினார். மேலும், ஜனாஃப் அ. அ. சிபுனிஸ் மற்றும் ஜனாஃப் றெ. சதாத் ஆகியோர் நூல் தொடர்பான கருத்துப் பகிர்வை வழங்கினர்.
முதன்மை விருந்தினர் உரையில், Director General ஜனாஃப் அ. ச. மு. பாயிஸ் அவர்கள், நூலாசிரியரின் சிந்தனைத் திறனை பாராட்டி, இந்நூல் பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டிய முக்கியமான படைப்பாகும் எனக் குறிப்பிட்டார். நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள், இந்நூல் சமூக முன்னேற்றத்திற்கும் இளைஞர்களின் சிந்தனை மாற்றத்திற்கும் வழிகாட்டும் முக்கிய பங்களிப்பைச் செய்யும் என பாராட்டினர். மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் விழாவை மேலும் சிறப்பித்தன.
“வாழ்வில் வெற்றிபெற மாற்றி யோசிப்போம்!” நூல், கல்வி, ஊடகம் மற்றும் சமூக சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புதிய தலைமுறைக்கு புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

