மேற்படி நிகழ்ச்சித்திட்டமானது இன்று (07) குச்சவெளி பிரதேச செயலகமும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகமும் இணைந்து குச்சவெளி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணியளவில் இனிதே ஆரம்பமானது.

குறித்த நிகழ்வில் ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குதல், அத்துடன் அவர்களது உடல், உள மற்றும் பாலியல் வன்முறைகளிலிருந்து விடுபட்டு, கல்வி ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்புடன் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க முடியும் எனும் நோக்கத்தில் கலந்துரையாடப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டதுடன்,

இந்நிகழ்வில் திருகோணமலை, நிலாவெளி, குச்சவெளி, புல்மோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்; குச்சவெளி பிரதேச செயளாலர் மற்றும் ஊழியர்கள்; சமூகமட்ட அமைப்புக்கள்; சர்வமத தலைவர்கள் மற்றும் கே.வி.சி ஊடகம் என்பன பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply