ஒலுவில் பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள சஹ்வா அரபுக் கல்லூரி  பொதுக்கிணறுகள் அமைத்துத்தருமாறு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் மிகவும் குறுகிய நாட்களுக்குள் இப் பொதுக்கிணற்றினை அமைத்து பயனாளிகள் பாவனைக்காக திறந்து கையளித்து வைத்ததுடன் இக்கல்லூரி தேவைகளையும் கேட்டறிந்தனர்.

இந்நிகழ்வில் மேலும் இந்நிகழ்வில் அதிதிகளாக YWMA பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா அவர்களும் CSWMA பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஸிம் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் அரபுக் கலாசாலையின் ஆசிரியர்கள்,நிருவாகத்தினர், மாணவர்கள், பொற்றோர்கள்,பழைய மாணவர்கள்,  என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பயனாளிகளுடன், முக்கியஸ்தர்கள்,  பிரதேசவாசிகள், நலன்வி்ரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply