திருகோணமலை திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இனம் காணப்படவில்லை எனவும் சடலம் இனம் காண முடியாத நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் நாளைய தினம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் மற்றும் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply