நாளை மறுதினம்(13) கட்டார், சவூதி, எமிரேற்ஸ்(UAE) போன்ற மத்தியகிழக்கின் செல்வம் கொழிக்கும் அரபு நாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில் கட்டார் அன்பளிப்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான #அதிசொகுதி போயிங்க் 747-8 ஜம்போ ஜெட் விமானத்தை ஏற்பதற்கு டொனால்ட் ட்றம்பின் நிருவாகம் தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட மிக மதிப்புமிக்க பரிசாக இது இருக்கலாம் என்று மேலும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

கட்டார் ஏன் எதற்கு இத்தனை பெரிய பரிசொன்றை அன்பளிப்பு செய்கிறது?, ட்ரம்ப் எதற்கு பகரமாக இந்த அன்பளிப்பை பெறுகிறார்? என்பது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் சமூகவலைத்தளங்களில் குவிகிறது.

அன்பளிப்பு நிஜமா என்பதை அடுத்து வரும் நாட்களில் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply