இலங்கை மாணவர் முகமது ரிஃபாய் முகமது சுஹைல் 21 வயதான இவர், மாவனெல்லையைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து பயிற்சி மாணவர் ஆவார்.
2024 ஒக்டோபரில், தெஹிவளையில் உள்ள இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில், தனது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாததற்காக முதலில் கைது செய்யப்பட்டார்.
அடையாள அட்டை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
எனினும், இஸ்ரேலிய கொடி மிதிக்கப்படுவதைக் காட்டும் ஒரு காணொளியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகக் கூறி, இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். 2025 ஜூலை 9 அன்று, தெஹிவளை காவல்துறையினர் மவுண்ட் லெவினியா நீதிமன்றத்தில் சுஹைல் எந்தக் குற்றமும் செய்யவில்லை எனத் தெரிவித்தனர்.
இருப்பினும், PTA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி கூறியதாகவும், அவரது வழக்கறிஞர் முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், காவல்துறையினர் குற்றத்திற்கான ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணையத்திற்கு இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த வழக்கு இலங்கையில் PTA சட்டத்தின் கீழ் நடைபெறும் கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள் குறித்து பரவலான விமர்சனங்களை எழுப்பியிருந்தது, குறிப்பாக மாணவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பாக.
இந்நிலையில் இன்றைய தினம் மாணவர் சுஹையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
#KVCMedia | #LocalNews | #Suhail | #srilanka | #Dehiwala | #mountlavinia | #Isreal | #flags | #arrested
