நேற்று, நீண்டகால உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்த்து, பிராந்தியத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான ஒரு சரியான வாய்ப்பாக அமைந்தது.


மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் கந்தளாய் பிரதேச செயலகத்தில் கந்தளாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது மீக நீண்ட கால தீர்க்கப்படாத காலம் காலம்காலமாக பேசப்படுகின்ற பேராறு பிரதேசத்தின் நீர் வடிகாலமைப்பு விடயமாக பேசப்பட்டது. மழைகாலத்தில் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதனால் இதுவிடயமாக EDO, அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் இது விடயமாக தகவல்களை வழங்கினர். 

சுமார் 30km வடிகான் திட்டத்தின் ஊடாக முழுமையாக இதற்கான தீர்வை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர் இது விடயமாக கருத்தில் கொள்ளப்பட்டு விரைவில் இதுவிடயமாக செயல்படுத்தல் பற்றி கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply