திருகோணமலை – இறக்ககண்டி, வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து இடம்பெறுவதாகவும்; கடந்த 2025-May-13 இரவு 07:45 PM மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் மரணம் அடைந்ததுடன் குறித்த வீதியில் வாகன விபத்து அடுத்தடுத்து தொடர்ந்து இடம் பெற்றுள்ளதாகவும் அங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி விபத்துக்கள்  அப்பகுதியில் “வீதி மின் விளக்குகள்” பொருத்தப் படாமல் இருப்பதால் இடம்பெறுவதாகவும் மற்றும் அவ்வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள் இரவு நேரங்களில் பயணிப்பதற்கு ஆபத்தான இருள் நிறைந்ததாவும் காணப்படுவதாக அம்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் இது குறித்து 2025-March-17 ஏற்கனவே நடைபெற்ற குச்சவெளி பிரதேச “ஜனநாயக பங்குதாரர் குழு கூட்டத்தில்” (- AHAM Humanitarian Resource Center;) Pradhesiya Sabha Kuchchaveli  செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியதாகவும், இன்று வரை நடைமுறை படுத்தப்படவில்லை என்றும்  அம்மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த வீதி மின்விளக்கு தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாட்டு கடிதத்திற்கு தயவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குச்சவெளி பிரதேச சபை செயலாளர் வெ.இந்திரஜித் அவர்களுக்கு KVC Media சார்பாக கேட்டு கொள்கின்றோம்.

Leave a Reply