திருகோணமலை மாவட்டத்தில் 10 புதிய மினி கடற்கரை பூங்காக்களை உருவாக்குவதற்கான தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் முதல் கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் பணிகள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன தலைமையில் திங்கட்கிழமை (25) குச்சவெளி பிச்சமல் விகாரைக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் குச்சவெளி பிரதேச செயலக செயலாளர், குச்சவெளி பிரதேச சபை செயலாளர், கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறையின் மாகாண பொறியாளர் மற்றும் பிற அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம் நிலையான சுற்றுலா மேம்பாட்டிற்கும், குச்சவெளி மக்களுக்கு ஏற்ற இலவச மண்டலத்தை உருவாக்குவதற்கும் எடுக்கப்பட்ட முதல் படியாகும் என்பதுடன்;

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன; எதிர்காலத்தில் இதுபோன்ற பல திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், இலங்கை மக்களுக்கு சுதந்திரமான மற்றும் அமைதியான சூழலைக் கொண்ட பசுமையான இலங்கை கட்டமைக்கப்படும் என வலியுறுத்தினார்.

Leave a Reply