கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையுடைய பயனாளிகளுக்கு, குறிப்பாக தினசரி வேலைப்பளுவிலும், உடல் நல சவால்களிலும் வாழும் ஒரு வயதான தாய்க்காக குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு நேற்று (23) மனிதநேயத்துடன் முன்னெடுக்கப்பட்டது.
அத்தாயின் குடிசை வீட்டில் நீர் வசதியின்றி நீண்ட காலமாக துன்பப்பட்டு வந்த நிலையில், அதனை நேரில் அறிந்த சமூக அக்கறையுடையவர்கள், தேசிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பை பெறுவதற்காக கல்முனை ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை உடனே ஏற்று,
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும்,
கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும்,ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான
ரஹ்மத் மன்சூர் அவர்கள், YWMA பேரவையின் ஏற்பாட்டில் குறுகிய காலத்துக்குள் இக்குடிநீர் இணைப்பை ஏற்படுத்தி, அந்தத் தாய்க்கு நேரில் சென்று கையளித்தார்.
இந்த நிகழ்வில், பவுண்டேசன் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டு பங்கேற்றனர்.
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்