இலங்கையில் சில பிரதேசங்களில் பிற்பகல் நேரத்தில் பலத்த மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசப்படும். எனவே அப்பிரதேச மக்கள் மின்னல் தாக்கத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இன்று காலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பல பிரதேசங்களில் பிற்பகல், இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படுகிறது.

மேலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் காலையில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, மத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply